எதிர்கால சந்ததியினரை மனதில் கொண்டு உழைத்து வருவதாகக் கூறிய பிரதமர் மோடி, ஒரு குடும்பத்தின் நலனுக்காக உழைக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சி மீது கடுமையான விமர்சனத்தை வைத்தார்.
வாரணாசியில் 12 ஆயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்பிலான 29 திட்டங்களைத் தொடங்கி வைத்துப் பேசிய அவர், கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஒருகுடும்பத்தை மட்டும் கருத்தில் கொண்டு திட்டங்கள் வகுக்கப்படவில்லை என்றார்.
முத்ரா யோஜனா திட்டம் மூலம் உத்தரப்பிரதேசத்தில் கோடிக்கணக்கான ஏழை மற்றும் தலித் மக்கள் பயனடைந்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.